போடியில் இன்று மாரத்தான் போட்டி :

By செய்திப்பிரிவு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி போடியில் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. ஜகாநி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கும் போட்டி, கட்டபொம்மன் சிலை வழியாக சிபிஏ கல்லூரி வரை சென்று மீண்டும் அதே வழியில் திரும்ப வேண்டும். போட்டி காலை 6 மணிக்கு தொடங்கும். 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப் படும். ஏற்பாடுகளை சூல் இயற்கை அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில மணிலா பயறு தரம் பிரிப்போர் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கம் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்