சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தேனி தமிழ்ச் சங்கம் மற்றும் சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் சார்பில் நீர்வளம் மற்றும் மேலாண்மை என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
இணையவழி நிகழ்ச்சிக்கு ஆய்வு கழகத் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.
தேனி தமிழ்ச் சங்க செயலாளர் சு.சி.பொன்முடி முன்னிலை வகித்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியர் நா.சுலோசனா வரவேற்றார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நான்கு நாட்கள் நடந்த கருத்தரங்கில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் மு.அப்துல்காதர், திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார், சூழலியல் ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன், சுவிஸ் அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் உளநலப் பராமரிப்பாளர் மதிவதனி ஆகியோர் நீர்வளம் குறித்து உரையாற்றினர்.
ஏற்பாடுகளை தேனி தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் எழுத்தாளருமான தேனி மு.சுப்பிரமணி செய்திருந்தார்.
போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் லெ.அலமேலு நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago