தேனி மாவட்டத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 46 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் தேர்தலில் இவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி 18 வயது பூர்த்தி அடைந்த 18 ஆயிரத்து 655 மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தலைமை வகித்தார். இதில் வாக்குச்சாவடி மையத்தில் சாய்வுதளம், சிறப்பு கழிப்பறை, குடிநீர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ உதவியாளர்கள் குறிப்பாக பார்வையற்றவர்கள் வாக்களிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சகுந்தலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago