பெரியகுளத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி சிலம்ப மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.
விழுதுகள் இளைஞர் மன்றத்தினர் மற்றும் அக்னீ விரனன் சிலம்ப மாணவர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியை நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். மன்ற துணைச் செயலாளர் அஜீத்பாண்டி முன்னிலை வகித்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று பெருமாள்கோயில் அருகே பேரணி நிறைவடைந்தது. அனைவரும் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி 100 சதவீதம் என்ற எண் வடிவில் நின்று உறுதிமொழி எடுத்தனர். நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, நகர அமைப்பாளர் நிஜந்தன்,விழுதுகள் இளைஞர் மன்ற நிர்வாகி சவுந்தரபாண்டி, சிவனேஷ் மற்றும் அக்னிவீரனன் சிலம்ப ஆசான் முத்தையா முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago