தேனி மாவட்டம், பெரியகுளம்ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகளிர் கல்லூரியில் 50-வது ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலர் பிஜே. குயின்ஸ்லி ஜெயந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சி.சேசுராணி ஆண்டறிக்கை வாசித்தார்.
மதுரை மண்டலக் கல்லூரி இணை இயக்குநர் பி. பொன்முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டால் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று பேசினார். ஆய்வு மேற்கொண்ட பேராசிரியர்கள், நூல் வெளியிட்ட பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதத் துறை இணைப் பேராசிரியர் கீதா அந்துவனேட் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago