தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு அந்தந்த பயிற்சி மையங்களிலேயே கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்காக ஆண்டிபட்டி தொகுதியில் ஆயிரத்து 64 அலுவலர்களும், பெரியகுளத்தில் ஆயிரத்து 912 அலுவலர்களும் பணிபுரிய உள்ளனர். இதே போல் போடியில் ஆயிரத்து 840 பேரும், கம்பத்தில் ஆயிரத்து 876 அலுவலர்களும் என மொத்தம் 7 ஆயிரத்து 492 அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.
இவர்களுக்கு நான்கு கட்ட பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக ஆண்டிபட்டி தொகுதியில் பணிபுரிபவர்களுக்கு பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, பெரியகுளத்தில் தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி,போடிக்கு தேனி முத்துதேவன்பட்டி நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி, கம்பத்துக்கு உத்தமபாளையம் ஹாஜிகருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தேர்தலில் பணிபுரியும் அலுவலர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பலரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, சுகாதார மையங்களில் ஊசி போட்டுக் கொண்டனர்.
தேர்தலுக்கான நாட்கள் குறைவாக உள்ளதால் இவர்களை ஒருங்கிணைத்து தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இந்தப் பயிற்சி மையங்களில் கரோனா தடுப்பூசிக்கான சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தேர்தல் அலுவலர்கள் ஆதார், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் இதில் ஏதாவது ஒன்றை எடுத்துச் சென்று இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago