திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒட்டன் சத்திரம் நகராட்சி, பேரூராட்சி பகுதி களில் உள்ள ஏழை மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேசினார்.
ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி குத்திலிப்பை, ஐ.வாடிப்பட்டி, கே.கீரனூர், சின்னமண்டவாடி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன் வலசு, வெள்ளியன்வலசு ஆகிய பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் தொகுதி முழுவதும் 20 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டது. பல ஊர்களில் மாணவ, மாணவிகள் விடுதிகள் கட்டப்பட்டன. சாலை அமைக்கப்பட்டது, பாலங்கள் கட்டப்பட்டன. திமுக ஆட்சி அமைந்ததும் நகராட்சி, பேரூராட்சியில் உள்ள ஏழை மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றத்தை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த நீதிமன்றங்களாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பிரச்சாரத்தின்போது ஒன்றியச் செயலாளர் ஜோதீஸ்வரன் உட்பட திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago