திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க திண்டுக்கல் எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவின்பேரில் பல்வேறு குழுக்களாக போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பழநியில், திண்டுக்கல் சாலையில் மதுவிலக்கு டி.எஸ்பி. பொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர் தேவமாதா ஆகியோர் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டதில் 768 மதுபாட்டில்கள்இருந்தன. மது பாட்டில்கள் மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்த போலீஸார். கடத்தலில் ஈடுபட்ட ராமலிங்கம், காளியப்பன், கருப்பசாமி, காளிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago