காரைக்குடி அருகே காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் பகிரங்கமாக வரவேற்பு கொடுத்ததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வைரவபுரம், தேவகோட்டை ரஸ்தா, அமராவதிபுதூர், திருவள்ளுவர் தெரு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அமராவதி புதூர் அண்ணாநகருக்கு சென்ற அவருக்கு அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் தமிழ்ச்செல்வி சிறப்பான வரவேற்பு கொடுத்தார்.
அதிமுக கவுன்சிலர் வரவேற்பால் காங்கிரஸார் உற்சாகமடைந்தனர். மேலும் வேட்பாளர் மாங்குடி அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டு, தான் வெற்றி பெற்றால் உடனடியாக செய்து தருவதாக உறுதியளித்தார்.
இதுகுறித்து ஒன்றியக் கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கூறுகையில், ‘‘ நான் அதிமுகவில் இருந்து விலகவில்லை. எங்கள் பகுதிக்கு வந்ததால் வரவேற் றேன். மேலும் எங்கள் பகுதி மக்கள் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்குத் தான் ஆதரவு தெரி வித்துள்ளனர்,’’ என்று கூறினார்.
அதிமுக கவுன்சிலர் ஒருவர் தங் களது பகுதியைச் சேர்ந்தவர்களோடு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரி வித்த சம்பவம் பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago