அரியமான் கடற்கரையில் ஒளிரும் பலூன்களை பறக்கவிட்டு வாக்காளர் விழிப்புணர்வு :

By செய்திப்பிரிவு

ராமேசுவரம் அருகே அரியமான் கடற்கரையில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ஹீலியம் நிரப்பப்பட்ட ஒளிரும் பலூன்கள் பறக்கவிடப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021-ஐ முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ராமேசுவரம் அருகே அரியமான் கடற்கரையில் மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் புதன்கிழமை இரவு ஹீலியம் நிரப்பப்பட்ட ஒளிரும் பலூன்கள் பறக்க விடப்பட்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பொதுத்தேர்தல் பார்வையாளர்கள் சொராப் பாபு, விசோப் கென்யே, அனுரக் வர்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், தேர்தல் காவல் பார்வையாளர் அனூப் யு செட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்