சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை யில் 25 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேவகோட்டை நகராட்சிப் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் பொதுமக்களுக்கு கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து தேவகோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று 6 இறைச்சிக் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கடையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் 25 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு கடையில் இருந்த தடை செய்யப்பட்ட 10 கிலோ பாலிதீன் பைகளையும் கைப்பற்றினர்.
சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்த இரு கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து பறிமுதல் செய்த கோழி இறைச்சியை குழிதோண்டி புதைத்து அழித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago