கமுதியில் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் வாக்கு சேகரிப்பு :

By செய்திப்பிரிவு

கமுதியில் நாம் தமிழர் கட்சியின் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ரஹ்மத் நிஷா மேள தாளங்களுடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத் தூர் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரஹமத் நிஷா, இவர் கட்சியினருடன் கமுதி பேருந்து நிலையம், தேவர் சிலை, மருதுபாண்டியர் சிலை, காமராஜர் சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் முக்கிய வீதிகளில் மேளதாளங்கள் முழங்க, கையில் கரும்புடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சியின் மாவட்டத் தலைவர் இசையரசன், கமுதி ஒன்றியச் செயலாளர் தேவேந்திரன், தொகுதி செயலாளர்கள் முனீஸ்வரன், சிவமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்