மயிலம்
திண்டிவனம் தொகுதியில் இடம் பெற்றிருந்தது மயிலம். கடந்த 2009ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் மயிலம் புதிய தொகுதி உருவானது. வல்லம், மயிலம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களை இத்தொகுதி உள்ளடக்கியது.பிரசித்திபெற்ற மயிலம் முருகன் கோயிலும், தீவனூர் விநாயகர் கோயிலும் இத்தொகுதியில் உள்ளன. வீடூர் அணை இத்தொகுதியில் உள்ளது. இத்தொகுதியில் வல்லம், நாட்டார் மங்கலம், அவ்வையார்குப்பம், மொடையூர், கூட்டேரிப்பட்டு, மயிலம், வீடூர், தீவனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
வெற்றி வரலாறு
தலா ஒரு முறை அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
வீடூர் அணை சுற்றுலா மையமாக மாற்றப்பட வேண்டும்.
மயிலம் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து மேம்பாலம் கட்டவேண்டும்.
மயிலம் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், தீயணைப்பு நிலையம், அரசு கல்லுாரி அமைக்க வேண்டும்.
வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் - 1,09,755
பெண் வாக்காளர்கள் - 1,10,088
திருநங்கைகள் - 125
மொத்த வாக்காளர்கள் - 2,19,868
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago