செஞ்சி1951ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு தேர்தல் வரை மேல்மலையனூர் தொகுதியாக இருந்தது

By செய்திப்பிரிவு

செஞ்சி

1951ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு தேர்தல் வரை மேல்மலையனூர் தொகுதியாக இருந்தது. 2011ம் ஆண்டு தேர்தலில் தொகுதி மறுசீரமைப்பில் செஞ்சி தொகுதியாக மாறியது. மேல்மலையனூர் தொகுதியாக இருந்தவரை இத்தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற பெருமையை செஞ்சி தொகுதியாக மாறியவுடன் பறிபோனது.

இத்தொகுதி அவலூர்பேட்டை, தாயனூர், மேல்மலையனூர், வளத்தி, சொக்கனந்தல், மேல்பாப்பாம்பட்டி, செம்மேடு,சிங்கவரம், தேவனாம் பேட்டை, நல்லான்பிள்ளைபெற்றாள் உள்ளிட்ட ஊராட்சிகளும் அனந்தபுரம் , செஞ்சி பேரூராட்சியையும் உள்ளடக்கியது.

இத்தொகுதியில் உலக புகழ் பெற்ற செஞ்சி கோட்டையும், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலும் உள்ளன. இத்தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம்.

வெற்றி வரலாறு

இத் தொகுதியில் 8முறை திமுகவும்,2 முறை காங்கிரஸும், தலா ஒரு முறை உழவர் உழைப்பாளர் கட்சியும், சுயேட்சையும் , அதிமுக, பாமகவும் வெற்றி பெற்றுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பு

ராஜாதேசிங்குவிற்கு மணிமண்டபமும், செஞ்சி கோட்டையை சுற்றுலா தளமாக்க வேண்டும்.

தொழிற்சாலைகள் ஏதுமில்லாததால் முழுக்க முழுக்க கிணற்று நீர் மற்றும் ஏரி நீர் பாசனத்தையே நம்பி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

10 அண்டுகளாக சீரமைக்கப்படும் திண்டிவனம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

வாக்காளர்கள்

ஆண் வாக்காளர்கள் - 1,28,545

பெண் வாக்காளர்கள் - 1,31,577

திருநங்கைகள் - 37

மொத்த வாக்காளர்கள் - 2,60,159

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்