விக்கிரவாண்டி
விழுப்புரம் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி விக்கிரவாண்டி.விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் சாலை அமைந்துள்ளதாலும், சாலையோர உணவகங்கள் நிரம்பியதாலும் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஊர் விக்கிரவாண்டி. விக்கிரவாண்டியில் அரிசி ஆலைகள் அதிகமாக உள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரியான முண்டியம்பாக்கம் இத்தொகுதியில் உள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
இங்கு அரிசி ஆலைகள் அதிகம் உள்ளதால் கூலி தொழிலாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படவேண்டும்.
அரிசி தர நிர்ணயக் கூடம் அமைக்க வேண்டும். அரிசியை பதப்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் வழிமுறைகளை இப்பகுதி பெண்களுக்கு கற்றுத் தர வேண்டும். அதற்கான வங்கிக் கடனுதவி தர வேண்டும்.
வெற்றி வரலாறு
திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இத்தொகுதியில் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் - 1,15,608
பெண் வாக்காளர்கள் - 1,18,268
திருநங்கைகள் - 25
மொத்த வாக்காளர்கள் - 2,33,901
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago