விழுப்புரம்
விழுப்புரம் தொகுதி 1952ம் ஆண்டு உருவானது. இத்தொகுதியில் விழுப்புரம் நகராட்சி, வளவனூர் பேரூராட்சி பில்லூர், காவணிப்பாக்கம் சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரசன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இத்தொகுதியில்தான் புகழ்பெற்ற பூவரசன் குப்பம் நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நகரமாகும்.
மக்களின் எதிர்பார்ப்புகள்
விழுப்புரம் நகரில் சுற்றுவட்டபாதை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும்.
நகரின் விரிவாக்கப் பகுதிகளில் பாதாளச்சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் நகர மக்களுக்கு முழுமையாக சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபாதையுடனான பூங்கா பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.
சிறுவந்தாடு பட்டுச்சேலைக்கு புவிசார் குறியீடு பெற மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் விழுப்புரத்தைச் சுற்றி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
விழுப்புரம் - புதுவை இடையேயான ரயில் போக்குவரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
வெற்றி வரலாறு
இத்தொகுதியில் சுயேட்சையும், காங்கிரஸூம் தலா ஒரு முறையும், 8 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் - 1,27,445
பெண் வாக்காளர்கள் - 1,33,463
திருநங்கைகள் - 62
மொத்த வாக்காளர்கள் - 2,60,970
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago