கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 330 வேட்பு மனுக்கள் ஏற்பு :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி, கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் 330 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி(தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை என 4 தொகுதிகளில் 126 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

அதன்படி கள்ளக்குறிச்சி தனித் தொகுதியில் 35 வேட்பு மனுக்களில் 17 மனுக்களும், சங்கராபுரம் தொகுதியில் 28 மனுக்களில் 19 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உளுந்தூர்பேட்டை தொகுதியில் 34 மனுக்களில் 17 மனுக்களும்,ரிஷிவந்தியம் தொகுதியில் 29 மனுக்களில் 17 மனுக்களும் ஏற்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 126 மனுக்களில் 70 மனுக்கள் ஏற்கப்பட்டன. 56 மனுக்கள் நிராகரிக் கப்பட்டன.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி,நெய்வேலி,விருத்தாசலம், திட்டக்குடி (தனி), காட்டுமன் னார்கோவில் (தனி) என 9 தொகுதிகளில் 263 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

அதன்படி விருத்தாசலம் தொகுதியில் 51 வேட்பு மனுக்களில் 37 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. கடலூர் தொகுதியில் 25 வேட்பு மனுக்களில் 19 மனுக்களும்,சிதம்பரம் தொகுதியில் 34 வேட்பு மனுக்களில் 15 மனுக்களும்,புவனகிரி தொகுதியில் 32 வேட்பு மனுக்களில் 14 மனுக்களும் ஏற்கப்பட்டன.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் 21 வேட்பு மனுக்களில் 12 மனுக்களும், பண்ருட்டி தொகுதியில் 23 வேட்பு மனுக்களில் 16 வேட்பு மனுக்களும், நெய்வேலி தொகுதியில் 20 வேட்பு மனுக்களில் 12 மனுக்களும், திட்டக்குடி தொகுதியில்32 வேட்பு மனுக்களில் 17 மனுக்களும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 25 வேட்பு மனுக்களில் 13 மனுக்களும் ஏற்கப்பட்டன்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 263 மனுக்களில் 155 மனுக்கள் ஏற்கப்பட்டன. 108 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப் புரம், விக்கிரவாண்டி, மயிலம்,வானூர், திண்டிவனம்,செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய 7 தொகுதிகளில் 195 வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அதன்படி விழுப்புரம் தொகுதியில் 32 வேட்பு மனுக்களில் 14 மனுக்களும், மயிலம் தொகுதியில் 25 வேட்பு மனுக்களில் 14 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

திண்டிவனம் (தனி) தொகுதியில் 31 வேட்புமனுக்களில் 15 மனுக்களும், வானூர் (தனி) தொகுதியில் 13 வேட்புமனுக்களில் 8 மனுக்களும், விழுப்புரம் தொகுதியில் 36 வேட்புமனுக்களில் 25 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் 30 வேட்பு மனுக்களில் 14 வேட்பு மனுக்களும், திருக்கோவிலூர் தொகுதியில் 28 வேட்பு மனுக்களில் 15 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 195 மனுக்களில் 105 மனுக்கள் ஏற்கப்பட்டன. 90 மனுக்கள் நிராகரிக் கப்பட்டன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 126 மனுக்களில் 70 மனுக்கள் ஏற்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 263 மனுக்களில் 155 மனுக்கள் ஏற்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 195 மனுக்களில் 105 மனுக்கள் ஏற்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்