கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு என்ன? : தொகுதிகள் வாரியாக ஒரு அலசல்கடலூர் மாவட்ட தொகுதிகள்...

By எஸ்.நீலவண்ணன், செய்திப்பிரிவு, ந.முருகவேல்

கடலூர்

கடலூர் நகராட்சி மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 31 ஊராட்சிகளை உள்ளடக்கியது இத்தொகுதி. ஆங்கிலேயேர் ஆட்சியில் தலைநகராக கடலூர் இருந்துள்ளது. அப்போது கடலூர் துறைமுகத்தை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். கடலூரில் புகழ் பெற்ற பாடலீஸ்வரர் கோயில், சில்வர் பீச் உள்ளது.

தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளது. கடலூர் நகர் பகுதி வர்த்தகம், கிராமபுறங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பு

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

கெடிலம் ஆற்றில் சர்க்கரை ஆலை கழிவு கலக்கப்படுவாதல் நிலத்தடி நீர் மாசாகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

போக்குவரத்து நெரிலைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மழை வெள்ள காலத்தில் நகரில் வெள்ளநீர் வடிய உரிய வடிகால் வசதி செய்து தரப்படவில்லை.

அரசு மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்படவில்லை.

வெற்றி வரலாறு

1952-ம் முதல் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் வரை 8 முறை திமுக, 4 முறை காங்கிரஸ், 3 முறை அதிமுக, தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி ஒருமுறை வென்றுள்ளது.

வாக்காளர்கள்

ஆண் வாக்களர்கள் - 1,14,616

பெண்வாக்காளர்கள் - 1,23,701

திருநங்கைகள் - 47

மொத்த வாக்காளர்கள் - 2,38,364

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்