குறிஞ்சிப்பாடி
1962ம் ஆண்டில் உருவான இத்தொகுதியில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, வடலூர் பேரூராட்சி உள்ளது. கடலூர் வட்டப் பகுதி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டப்பகுதிகளில் உள்ள 50 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. உலகப் புகழ் பெற்ற வடலூர் சத்திய ஞான சபை, திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் மற்றும் கடலூர் சிப்காட் பகுதி இத் தொகுதியில் உள்ளது. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. நெசவுத் தொழிலும் அதிக அளவில் உள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடங்கள் வேண்டும்.
சிப்காட் பகுதியில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிப்காட் பகுதியில் காற்று, நிலத்தடி நீர் மாசு பட்டிருப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் பகுதியில் உள்ள மக்களுக்கு மாதம் ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய தனியாக அனைத்து பிரிவு சிறப்பு மருத்துவக்குழுவை ஏற்பாடு செய்ய வேண்டும்.
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக்கப்பட வேண்டும்.
பெருமாள் ஏரி, பெரிய ஏரிய ஆகிய ஏரிகளை தூர்வார வேண்டும்,
விதை நெல் சுத்தப்படும் நிலையம் அமைக்க வேண்டும்.
வெற்றி வரலாறு
1962-ம் முதல் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் வரை இத்தொகுதியில் 9 முறை திமுகவும்,4 அதிமுகவும் வென்றுள்ளது.
வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் - 1,19,707
பெண் வாக்காளர்கள் - 1,22,855
திருநாங்கைகள் - 23
மொத்த வாக்காளர்கள் - 2,42,585
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago