சிதம்பரம்
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர், பரங்கிப்பேட்டை பேரூராட்சிகள் மற்றும் 50 கிராம பஞ்சாயத்துக்கள் அடங்கியது இத்தொகுதி. உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோயில், அண்ணாமலை பல்கலைக்கழகம், சுவாமி சகஜானந்தா மணி மண்டபம், பரங்கிப்பேட்டை பாபாஜி கோயில் இத்தொகுதியில் உள்ளது. இத்தொகுதியிலும் விவசாயமே பிரதானம் என்றாலும் மீன்பிடி தொழிலும் சிறப்பாக நடக்கிறது.
மக்கள் எதிர்பார்பு
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்கூடங்களை கொண்டு வர வேண்டும்.
கவரிங் தொழில்களை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடனுதவி தர வேண்டும்.
அனைத்து வசதிகளும் கொண்ட நவீன பேருந்து நிலையம் கொண்டு வரப்பட வேண்டும்.
மழை, வெள்ள காலங்களில் வெள்ளநீர் விரைவில் வடியும் வகையில் வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இப்பகுதியில் உள்ள முதலைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, சுற்றுலாத்துறை சார்பில் முதலைப் பண்ணை அமைக்க வேண்டும்.
வெற்றி வரலாறு
1951-ம் முதல் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் வரை இத்தொகுதியில்5 முறை காங்கிரசும்,4 முறை திமுகவும்,4 முறை அதிமுகவும், ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும், ஒரு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளது.
வாக்காளர்கள்
ஆண் வாக்களர்கள் - 1,22,800
பெண் வாக்காளர்கள் - 1,27,913
திருநாங்கைகள் - 22
மொத்த வாக்காளர்கள் - 2,50,735
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago