புவனகிரிசேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் விருத்தாசலம், சிதம்பரம் வட்டப்பகுதியை சேர்ந்த 50 கிராம பஞ்சாயத்துக்கள் அடங்கியது இத்தொகுதி

By செய்திப்பிரிவு

புவனகிரி

சேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் பேரூராட்சிகள் மற்றும் விருத்தாசலம், சிதம்பரம் வட்டப்பகுதியை சேர்ந்த 50 கிராம பஞ்சாயத்துக்கள் அடங்கியது இத்தொகுதி. புவனகிரியில் ராகவேந்தர் கோயில், சேத்தியாத்தோப்பில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவை உள்ளது. இத்தொகுதியிலும் விவசாயமே பிரதான தொழில். பெண் வாக்காளர் அதிகம் உள்ள தொகுதி.

மக்களின் எதிர்பார்ப்பு

சரியான சாலை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்பட வேண்டும்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடல்நீர் உள்ளே புகாதவாறு வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட வேண்டும்.

விவசாயம் சார்ந்த தொழில்களை வளர்க்கும் வகையில், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் சார் தொழிற் கூடங்கள் அமைக்க வேண்டும்.

வெற்றி வரலாறு

1952-ம் முதல் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் வரை 6முறை அதிமுகவும்,4 முறை திமுகவும், 3 முறை காங்கிரசும், ஒரு முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும், ஒரு முறை இந்திய தேசிய லீக்கும் வென்றுள்ளது.

வாக்காளர்கள்

ஆண் வாக்காளர்கள் - 1,23,300

பெண் வாக்காளர்கள் - 1,24,938

திருநங்கைகள் - 19

மொத்த வாக்காளர்கள் - 2,48,257

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்