காட்டுமன்னார்கோவில் (தனி)
கடலூர் மாவட்டத்தின் கடைகோடி தொகுதி இது. 1962ல் உருவான இத்தொகுதி யில் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி, முஷ்ணம் பேரூராட்சி, லால்பேட்டை பேரூராட்சி மற்றும் குமராட்சி, காட்டுமன்னார்கோவில், முஷ்ணம் ஒன்றியப்பகுதிகளை சேர்ந்த 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இது இப்பகுதிக்கு மட்டுமின்றி சென்னையின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இங்கு புகழ்பெற்ற வீரநாராயண பெருமாள் கோயில், அனந்தீஸ்வரன் கோயில், மேலக்கடம்பூர் அமிதகடேஸ்வரர் கோயில், ஓமாம்புலியூரில் பிரணவ வியாக்ரபுரிஸ்வர் கோயில் உள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
நவீனமாக்கப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.
வீராணம் ஏரியை தூர் வாரிட வேண்டும்.
முக்கிய நகரங்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்திட வேண்டும்.
வெள்ள நீரை பொதுமக்கள், விவசாயத்துக்கு பாதிப்பில்லாமல் வடிந்திட நிரந்தர தீர்வு காண வேண்டும்.
சாலைகளை மேம்படுத்திட வேண்டும்.
அரசு கலைக் கல்லூரியை நிரந்தர இடத்தில் அமைத்து, அதற்கான கட்டிடங்களை கட்டிட வேண்டும்.
வெற்றி வரலாறு
இத்தொகுதியில் திமுக 5 முறை,காங்கிரஸ் 2முறை, அதிமுக 2 முறை, மனித உரிமைகள் கட்சி 2 முறை,காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை ஒரு முறை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளது.
வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் - 1,14,202
பெண் வாக்காளர்கள் - 1,14,503
திருநங்கைகள் - 16
மொத்த வாக்காளர்கள் - 2,28,721.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago