கள்ளக்குறிச்சி மாவட்ட தொகுதிகள்... :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி (தனி)

திரும்பும் இடமெங்கும் கண்ணுக்கு பசுமையளிக்கும் நெல் வயல்கள், கரும்புகள், மரவள்ளிக் கிழங்குகள், பருத்தி என பசுமையாக காட்சியளிக்கும் இந்த தொகுதி பழமைவாய்ந்த கோயில்களை உள்ளடக்கியது.

1962-ல் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. பின்னர் 1967-ல் கள்ளக்குறிச்சி பொது தொகுதியாக மாறியது அதன்பின் 1977-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி நீக்கப்பட்டு சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. மீண்டும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி மறு சீரமைப்பில் கள்ளக்குறிச்சி தனித் தொகுதியாக மாறியது.

கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேரூராட்சி, கள்ளக்குறிச்சி ஒன்றியத்தின் 25 ஊராட்சிகள், சின்னசேலம் ஒன்றியத்தின் 37 ஊராட்சிகள், தியாகதுருகம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் நகராட்சி வார்டுகள் 21, பேரூராட்சி வார்டுகள் 15, மற்றும் 102 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது.

மக்களின் எதிர்பார்ப்பு

கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக்க கொண்டு புதிய மாவட்டமாக உருவான போதிலும், கள்ளக்குறிச்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பல விஷயங்களில் பின்தங்கி ஒடுக்கப்பட்ட ஒரு பகுதியாக இருக்கிறது.

விவசாய பூமியானாலும், குடிநீருக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது.

கள்ளக்குறிச்சி ரயில் நிலையப் பணி மந்தமாக நடைபெறுவதால் மாவட்டத் தலைநகருக்கு ரயில் போக்குவரத்து வசதி இல்லை.

வாக்காளர்கள்

ஆண் - 1,41,681

பெண் - 1,43,953

திருநங்கைகள் - 53

மொத்த வாக்காளர்கள் - 2,85,690

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்