சங்கராபுரம்
1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி கல்வராயன்மலை ஒன்றியம், சின்னசேலம் ஒன்றியம், சங்கராபுரம் வடக்கநந்தல் பேரூராட்சிகளை உள்ளடக்கியது. இதில் கல்வராயன் மலை ‘ஏழைகளின் மலை வாசஸ்தலம்’ என்று அழைக்கப்படுகின்றது. மலைவாழ் பழங்குடியினர்களின் பூர்வீக வாழ்விடமாக இன்றும் திகழ்கிறது. இங்கு பெரியார் அருவி, மேகம் அருவி, சிருக்களூர் அருவி,கவியம் அருவி, மாய அருவி என 5க்கும் மேற்பட்ட அருவிகள் உள்ளன.
சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இதில் வடக்கநந்தல் பேரூராட்சி மற்றும் சின்னசேலம் பேரூராட்சி சங்கராபுரம் ஒன்றியம் பகுதிகளை உள்ளடக்கியது.
மக்களின் எதிர்பார்ப்புகள்
கல்வராயன் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வனப் பகுதிகளில் சாலை அமைத்து தரவேண்டும். வனத்துறையினர் கெடுபிடிகளை தளர்த்த வேண்டும். போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும்.
போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் இடைத்தரகர்களின் காட்டும் பணத்தாசையால், செம்மரம் வெட்டும் தொழிலுக்குச் சென்று சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் சூழல் நிலவுகிறது. இதை களைய முறையான வழிகாட்டுதல் நெறிமுறையை அரசு மேற்கொள்ள வேண்டும்.
பழங்குடியினருக்கான சான்றிதழ் வழங்குவதில் வருவாய் துறையினரின் அலைக்கழிப்பால் அவர்களது குழந்தைகள் கல்வி கற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது. சான்றுகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெற்றி வரலாறு
இதுவரையில் இத்தொகுதியில் அதிமுக 4 முறையும் திமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாமக தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்கள்
ஆண் - 1,33,498
பெண் - 1,34,380
திருநங்கைகள் - 48
மொத்த வாக்காளர்கள் - 2,67,926
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago