ரிஷிவந்தியம்
முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே கொண்ட ஒரு தொகுதி ரிஷிவந்தியம் தொகுதி. அர்த்த நாரீஸ்வரர் கோயில், ஆதி திருவரங்கம், சோழபாண்டியபுரம் கல்வெட்டுகள், ஜம்பை கோயில் என வரலாற்று ஆய்வாளர்களின் பயிற்சி பகுதியாக விளங்கி வருகிறது.
கரும்பு விளைச்சலும், அவற்றை மதிப்புக் கூட்டும் சர்க்கரை ஆலைகளும் நிறைந்த பகுதி. இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பைப் பெற்றார்.
மக்களின் எதிர்பார்ப்புகள்
மிகவும் பின் தங்கிய பகுதியாக விளங்கும் இத்தொகுதியில் விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்து காணப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்திற்கான எந்த ஒரு தொலைநோக்குத் திட்டமும் இல்லை.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் தான் அரசுக் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. தொழில் சார் பட்டயப் படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள் இல்லை என்ற குறையோடு, விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்களும் இல்லை குறைபாடு தொகுதி வாசிகளிடம் நிலவுகிறது.
வெற்றி வரலாறு
இதுவரையில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிகப்படியாக காங்கிரஸ் கட்சி 5 முறை, திமுக 4 முறை, தமிழ் மாநில காங்கிரஸ் 2 முறை, அதிமுக, தேமுதிக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
வாக்காளர்கள்
ஆண் - 1,35,549
பெண் - 1,31,923
திருநங்கைகள் - 59
மொத்த வாக்காளர்கள் - 2,67,531
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago