கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்
இந்த அணிவகுப்பினை ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார், ஆய்வாளர் அமுதா உள்ளிட்ட பல காவலர்கள் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக இந்த அணிவகுப்பு நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. தனிப்பிரிவு போலீஸார் ராமசாமி, பிரபு, ரஞ்சித் உளவுப்பிரிவு போலீஸார் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago