பெரியகுளம் வடகரையில் உள்ள கண்மாயில் பூச்சிமருந்து கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன.
பெரியகுளம் வடகரை பகுதியில் சுக்ரியா கண்மாய் உள்ளது. இதனை அன்னபிரகாசம் என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் தண்ணீரில் பூச்சி மருந்தை கலந்து விட்டனர். இதனால் கண்மாயில் இருந்த ஏராளமான மீன்கள் உயிரிழந்தன. கடந்த 2 நாட்களாக மீன்கள் இங்கு செத்து மிதந்து கொண்டிருக்கின்றன.
இந்த கண்மாயை குத்தகைக்கு எடுக்க பலரும் போட்டியிட்ட நிலையில் தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்த மருந்து கலந்துள்ளனர் என்று குத்தகைதாரர் குற்றம் சாட்டினார். மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் இந்தக் கண்மாய் நீரையே அருந்தும். எனவே நீரை உடனடியாக சுத்திகரிப்பு செய்வதுடன், குளத்து நீரில் மருந்து கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுப்பணித்துறையினர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago