தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதரனின் மகள் உதயகீர்த்திகா. விண்வெளி வீராங் கனையாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் ஏர் ஃபோர்ஸ் யுனிவர்சிடியில் நான்காண்டு சிறப்புப் பொறியியல் கல்வியை முடித்தார்.
தொடர்ந்து போலந்து நாட்டில் உள்ள அனலாக் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் பைலட் பயிற்சிக்காக டெல்லியில் நுழைவுத் தேர்வையும் எழுதி உள்ளார்.
இவருக்கு கம்பத்தில் நேதாஜி அறகட்டளை சார்பில் பாராட்டு விழா நடந்தது. கவிஞர் பாரதன் தலைமை வகித்தார். கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கே.சிலைமணி, சித்த மருத்துவர் சிராஜூதீன், ஐந்து மாவட்ட விவசாய சங்க பொதுச் செயலாளர் பொன்காட்சி கண்ணன், மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ந.தியாகராஜன் ஆகியோர் மாணவியைப் பாராட்டிப் பேசினர்.
பசுமைசெந்தில், தேனி பாண்டி, ஆசிரியர் ஜி.பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago