ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை கண்காணிக்கவும், முறை யாக நடத்தவும், வாக்குப்பதிவு தகவல்களை எளிதில் பெறும் வகையில் தொகுதிகள் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி ஆண்டிபட்டி தொகுதி 40 மண்டலங்களாகவும், பெரியகுளத்தில் (தனி) 41 மண்டலங்களாகவும், போடி 35 மண்டலங்களாகவும், கம்பம் தொகுதியில் 39 மண்டலங்களாகவும் ஆக மொத்தம் 155 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு நியமிக்கப்பட்டுள்ள 155 மண்டல அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி தேனியில் நடந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள் வது,தேர்தல் நாளன்று குறுஞ்செய்தி அனுப்புவது உள்ளிட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டன. வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர்கள் சத்யமூர்த்தி, பொறுப்பு அலுவலர் விஷ்ணுராம்மேத்தி, தனி வட்டாட்சியர்(தேர்தல்) பாலசண்முகம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago