வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இன்று முதற்கட்ட பயிற்சி :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலை 1, 2 மற்றும் 3 ஆகியோர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று (ஞாயிறு) அந்தந்த வட்டங்களில் நடக்க உள்ளது.

தேனி வட்டத்தில் தேர்தல் பணி புரிய நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வீரபாண்டி சவுராஷ்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பெரியகுளம் வட்டத்தில் தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி வட்டத்தில் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் நிலை அலுவலர்களுக்கும், முதன்மை அலுவலர்கள், வாக்குப்பதிவு நிலை 1 மற்றும் நிலை 3 அலுவலர்களுக்கும் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிலை 2 அலுவலர்களுக்கும், போடி வட்டத்தில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பள்ளியிலும், உத்தமபாளையம் வட்டத்தில் ஹாஜி கருத்தராவுத்தர் கெளடியா கல்லூரியிலும் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளில் தேனி வட்டத்தில் 1265 வாக்குப்பதிவு அலுவலர்களும், பெரியகுளம் வட்டத்தில் 1370 வாக்குப்பதிவு அலுவலர்களும், ஆண்டிபட்டியில் 1513 வாக்குப்பதிவு அலுவலர்களும் போடியில் 1041 வாக்குப்பதிவு அலுவலர்களும், உத்தமபாளையம் வட்டத்தில் 2303 அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஹெச். கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்