சில்வார்பட்டி அரசு மாதிரிப் பள்ளி இந்த ஆண்டு முதல் தேர்வு மையமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வியுடன் பல்வேறு தனித்திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேர்ச்சி சதவீதம் உள்ளிட்டவற்றிலும் சிறப்பு நிலையில் இருந்ததால் இப்பள்ளி சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்றது. இப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் 2005-ம் ஆண்டு முதல் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்குச் சென்று தேர்வு எழுதிவந்தனர். இந்நிலையில் 2020-21-ம் ஆண்டிற்கு இப்பள்ளியே தேர்வு மையமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பள்ளித் தலைமையாசிரியர் மோகன், உதவித் தலைமையாசிரியர் செல்வக்குமார் ஆகியோர் பெரியகுளம் மாவட்டக் கல்வி அலுவலர் பாலாஜி, முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி ஆகியோரை சந்தித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இது குறித்து இவர்கள் கூறுகையில், இயக்குனரகத்தின் இந்த அறிவிப்பால் அரசு தேர்விற்கு வெளிமையங்களுக்குச் செல்லாமல் தான் படித்த பள்ளியிலிருந்தே தேர்வெழுத உள்ளனர்.
இது உளவியல் ரீதியாக அவர்களுக்கு ஒரு செளகர்யமான சூழ்நிலையை உருவாக்கித் தரும். உரிய நேரத்தில் பள்ளியை நேரில் ஆய்வு செய்து பரிந்துரைத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடமைப்பட்டுள்ளோம். இத்தேர்வு மையம் பெறப்பட்டதன் மூலம் அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை உயரும். 5 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 425 ஆக இருந்த நிலையில் தற்போது 1687ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர பரிந்துரைக் கும்படியும் அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறேம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago