ராமநாதபுரம் மாவட்டத்தில்81 வேட்புமனுக்கள் ஏற்பு : 51 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 132 மனுக்களில் 81 மனுக்கள் ஏற்கப்பட்டு, 51 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திரு வாடானை, பரமக்குடி(தனி), ராமநாத புரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

தொகுதி வாரியாக திருவாடானையில் 32 மனுக்கள், பரமக்குடியில் 24, ராமநாதபுரத்தில் 38, முதுகுளத்தூரில் 38 என மொத்தம் 132 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்தந்தத் தொகுதி தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று காலை 11 மணியிலிருந்து மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் பங்கேற்றனர். பரிசீலனையின் இறுதியில் திருவாடானையில் 18 மனுக்கள் ஏற்கப் பட்டன. 14 மனுக்கள் நிராகரிக்கப் பட்டன. பரமக்குடியில் 15 மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 மனுக்கள் நிராகரிக்கப் பட்டன. ராமநாதபுரத்தில் 23 மனுக் கள் ஏற்கப்பட்டு, 15 மனுக்கள் நிரா கரிக்கப்பட்டன. முதுகுளத்தூரில் 25 மனுக்கள் ஏற்கப்பட்டு, 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 132 மனுக்களில் 81 மனுக்கள் ஏற்கப்பட்டு, 51 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

மனுக்களை வாபஸ்பெற வரும் 22-ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்