தேவர் சிலை அகற்றப்பட்டதை கண்டித்துகமுதி அருகே கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

மேலூர் அருகே தேவர் சிலையை அகற்றியதற்கு கமுதி அருகே கே.வேப்பங்குளத்தில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலூர் அருகே உள்ள எம்.வெள்ளாளப்பட்டி கிராமத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட தேவர் சிலையை அகற்றியபோது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து சமுதாய அமைப்புகள், சமுதாயத் தலைவர்கள் அப்பகுதியில் முகாமிட்டு சமாதானப் பேச்சு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிலை அகற்றத்தை கண்டித்து, கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் கருப்புக்கொடி கட்டி மக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்