வாகன விபத்தில்இளைஞர் மரணம் :

By செய்திப்பிரிவு

கமுதி அருகே இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த தனியார் சோலார் மின் உற்பத்தி நிலைய ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தைச் சேர்ந்த வழிவிட்டான் மகன் வடிவேல்முருகன் (34). இவர் கமுதி புதுக்கோட்டை அருகே தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த மார்ச் 16-ம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பும்போது, சாலையின் குறுக்கே எதிர்பாராதவிதமாக வந்த மாட்டின் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வடிவேல் முருகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன்சேதுபதி அளித்த புகாரின் பேரில், கமுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்