ஆட்சியில் இருந்தவர்கள் மானாமதுரை தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அத்தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி குற்றம் சாட்டினார்.
மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனத்தில் திமுக கூட்டணி கட்சியினரின் செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் மானாமதுரை தொகு திக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. சிப்காட்டில் இருந்த ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை வாய்ப்பின்றி இளைஞர்கள் வெளிநாடு, வெளியூர்களுக்கு இடம் பெயரும் நிலை உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முழுமையாகச் செயல்பட வில்லை. திருப்புவனம், இளையான்குடி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை யான புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. திருப்புவனம், மானாமதுரையில் அரசு கல்லூரி கொண்டு வரவில்லை. இளையான்குடியில் நெல், மிளகாய் தானியங்களைப் பாதுகாக்க குளிர் பதனக் கிடங்கு அமைப்பேன் என்று கடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நான் வெற்றி பெற்றதும் உங்களோடு ஒருவராக இருந்து நீண்டநாள் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றுவேன், என்று கூறினார். திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago