அகரம் அகழாய்வில் மண் குழுமை கண்டெடுப்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அகரம் அகழாய்வில் மண் குழுமை கண்டெடுக்கப்பட்டது.

கீழடியில் 7-வது கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல, கொந்தகை, அகரத்திலும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை கீழடியில் மொத்தம் 9 குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு ஒரு குழி தோண்டும் பணி நடக்கிறது. இதில் 2 அடி ஆழத்தில் ஏற்கெனவே பாசி மணிகள், சில்லு வட்டு, பானை ஓடுகள் கிடைத்தன.

மேலும் மணலால் ஆன கூம்பு வடிவப் பாத்திரம், மண் மூடிகள் கிடைத்தன.

அதேபோல் கொந்தகையில் மூடிய நிலையில் முதுமக்கள் தாழியும் கிடைத்தது. தற்போது அகரத்தில் தானியங்களைச் சேகரிக்கும் மண் குழுமை கிடைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்