தமிழ் இனத்துக்கு முழு விரோதி பாஜக ப.சிதம்பரம் குற்றச்சாட்டு :

By செய்திப்பிரிவு

தமிழ் மொழி, தமிழினத்துக்கு முழு விரோதி பாஜக என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் ப. சிதம்பரம் பேசியதாவது:

கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமை கட்சியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் அடகு வைத்தது. அதற்கு நான் அன்றே கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்.

தற்போது நாம் திமுகவுடன் சேர்ந்து போட்டியிடுகிறோம். கடந்த 1971, 1996 ஆகிய ஆண்டுகளில் இருந்த எதிரிகளை விட 2021-ல் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்குமான மிகப்பெரிய எதிரியைச் சந்திக்கிறோம்.

முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் பாஜகவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகள் மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஆட்சி முடிவடைந்த கடைசிக் காலத்தில் ஏராளமான திட்டங்களை அறிவிப்பு செய்தது ஏமாற்று வேலை.

கொள்கையால் வேறுபட்டாலும் மொழியால் தமிழினம் எப்போதும் ஒற்றுமையுடன் வாழ்கிறது. தமிழ் மொழி, தமிழினத்துக்கு முழு விரோதி பாஜகதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்