ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க பொதுத் தேர்தல் பார்வையாளர்களாக (ராமநாதபுரம், முதுகுளத்தூர்) சொராப் பாபு, (பரமக்குடி) விசோப் கென்யே, (திருவாடானை) அனுரக் வர்மா ஆகியோரும், காவல் பார்வையாளராக அனூப் யு செட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாக, தேர்தல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக் காளர் சரிபார்க்கக்கூடிய இயந்திரங்கள், தொகுதிகள் வாரியாக பிரித்து பாதுகாப்பாக வைக்கும் பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் ஆகியவற்றின் இடவசதி மற்றும் தற்போதைய நிலை, வாக்கு எண்ணும் பணிகளின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையிலிருந்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்வதற்கான வழி, வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் அறைக்கு வந்து செல்வதற்கான வழி என முறையே திட்டமிட்டு போதிய பேரிகேட் தடுப்புகள் அமைத்திடவும், போதிய சிசிடிவி கேமரா அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் பார்வையாளர்கள் அறிவுரை வழங்கினர்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, உதவி தேர்தல் அலு வலர்கள் சுகபுத்ரா,தங்கவேல் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago