மானாமதுரையில் 13 பேரின் மனுக்கள் ஏற்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை(தனி) தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த 20 மனுக்களில் 7 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட 13 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

மானாமதுரை தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.நாகராஜன், திமுக சார்பில் தமிழரசி, அமமுக சார்பில் மாரியப்பன் கென்னடி, நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முகபிரியா உள்ளிட்ட 20 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தனலெட்சுமி தலைமையில் நடந்தது. தேர்தல் செலவினப் பார்வையாளர் வனஸ்ரீஹீள்ளன்னன்னவர் முன்னிலை வகித்தார். பரிசீலனையில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்களின் மனுக்கள், இருமுறை தாக்கல் செய்த மனுக்கள் என 7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்