தனியார் மயத்தைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எல்ஐசியின் பங்கு விலக்கல் நடவடிக்கையைக் கைவிட வேண்டும், தனியார் இன்சூரன்ஸில் அந்நிய முதலீட்டை உயர்த்தக் கூடாது, பொதுத்துறை, பொது இன்சூரன்ஸ், பொதுத்துறை வங்கிகள் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, எல்ஐசி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி ராமநாதபுரம், பரமக்குடி எல்ஐசி கிளை அலுவலகங்கள், ராமேசு வரம் துணை அலுவலகம் மூடப்பட்டு செயல்படவில்லை.
அதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரம் கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கம், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் நிர்வாகி ஈஸ்வரன் தலைமை வகித்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கக் கிளைச் செயலாளர் டி.முத்துப்பாண்டி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நிர்வாகி சேசு நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago