பிள்ளையார்பட்டி பகுதியில் கற்பூரம், ஊதுபத்தி தொழிலை மேம்படுத்துவேன் : திருப்பத்தூர் அதிமுக வேட்பாளர் உறுதி

By செய்திப்பிரிவு

‘‘பிள்ளையார்பட்டி பகுதியில் கற்பூரம், ஊதுபத்தி தொழிலை மேம்படுத்துவேன்,’’ என திருப்பத்தூர் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜ் உறுதி அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை மருது அழகுராஜ் தொடங்கினார். முன்னதாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார். அதன்பிறகு பிரச்சாரத்தை தொடங்கிய அவர் பேசியதாவது: தாய்மார்களின் வாழ்த்துகளோடு பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். பிள்ளையார்பட்டியில் எனக்கு அதிக வாக்குகள் விழும் என நம்புகிறேன். பிள்ளையார்பட்டி பகுதியில் பாதாளச் சாக்கடை அமைத்து கொசு இல்லாத பகுதியாக மாற்றுவேன். முழுமையாக பயன்பாட்டுக்கு வராத பிள்ளையார்பட்டி பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவேன்.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இப்பகுதியில் வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். கற்பூரம், ஊதுபத்தி தயாரிப்பில் பெண்கள் ஈடுபடுகின்றனர். அத்தொழிலை பெரிய அளவில் குடிசைத் தொழிலாக மாற்றி பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தொகுதி மக்கள் அடிப்படை பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்