அதிமுகவின் முதலாளிகள் புதுடெல்லியில் இருக்கின்றனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சின்ன, சின்ன கட்சிகளெல்லாம் கவர்ச்சியாக வந்து போட்டியிடுகின்றன. அவையெல்லாம் நோட்டாவுக்கு சமம். தேர்தலுக்கு மட்டும் வரும் கட்சிகளை ஒதுக்கிவிட வேண்டும். அதிமுக ஆட்சியால் 10 ஆண்டுகளாக துயரத்தில் மக்கள் வாழ்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக சுயமாக முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. அதிமுகவின் முதலாளிகள் புதுடெல்லியில் இருக்கின்றனர். பாஜக முதலாளி, அதிமுக தொழிலாளி. காங்கிரஸில் எங்களது உறவினருக்கு சீட் கொடுக்கவில்லை. தொண்டனுக்குத்தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago