காரைக்குடியில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.

இத்திருவிழா கடந்த மார்ச் 9-ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நேற்று ஏராளமான பக்தர்கள் கரகம், மதுக்குடம், முளைப்பாரி, பால்குடம், பறவை காவடி, வேல்காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் குடங்களில் எடுத்து வந்த பாலை கோயில் முன்பு இருந்த பிரம்மாண்டத் தொட்டியில் ஊற்றினர். பிறகு பால் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். நூற்றுக் கணக்கான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்