சிவகங்கை தொகுதி தேர்தல் பார்வையாளர் உத்தரவின்பேரில் மதகுபட்டி அருகே கைப்பையில் பணம் வைத்திருந்ததாக அதிமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது:
சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி பொதுப் பார்வையாளர் முத்துகிருஷ்ணன் சங்கரநாராணயணன் உத்தரவுப்படி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் மதகுபட்டி அருகே திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சிலர் சந்தேகத்துக்கு இடமாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்தபோது , முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
ரூ.15 ஆயிரம் ரொக்கம்
ஒவ்வொருவரிடமும் இருந்த கைப்பையில் ஒரு நோட்டுப் புத்தகமும், அதில் 50 போ் கொண்ட பெயர் பட்டியலும் இருந்தன. அவர்களிடம் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.15 ஆயிரம் ரொக்கம் இருந்தது.
மேலும் விசாரணையில் அவர்கள் அருள்ஸ்டீபன், சண்முகராஜா, செல்வ ராஜ், பாலசுப்ரமணியன், வெங்கடேஷ், செந்தில், பெருமாள், விஜயராமன், மூர்த்தி, கருப்பையா, பொரியகருப்பன், மனோகரன், அந்தோணி, விஸ்வநாதன் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக மதகுபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதில் அருள்ஸ்டீபன் காளையார்கோவில் அதிமுக ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago