வடலூர் அருகே உள்ள பரவனாற்றில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயிலாலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இன்னும் 10 நாளில் ஏரி வறண்டு போகும் நிலை ஏற்படும். தற்போது ஏரியில் இருந்து சென்னைக்கு விநாடிக்கு 19 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு மாற்று ஏற்பாடாக கடந்த 3 தினங்களாக வாலாஜா ஏரியில் இருந்து பரவனாற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பரவனாற்றில் ராட்சத மோட்டர்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது வாலாஜா ஏரியில் 5 அடி தண்ணீர் உள்ளது. கடந்த 3 தினங்களாக சென்னைக்கு பரவனாற்றில் இருந்து விநாடிக்கு 16 கனஅடி தண்ணீர் வீராணம் குழாய் வழியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கோடையை சமாளிக்க இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீராணம் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயிலாலும் நீர் மட்டம் குறைந்து வருகிறது.இன்னும் 10 நாளில் ஏரி வறண்டு போகும் நிலை ஏற்படும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago