கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு - பணம் பட்டுவாடாவைத் தடுக்க முழு நேரமும் கண்காணிப்பு : தேர்தல் பறக்கும் படையினருக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

கடலூரில் தேர்தல் செலவின பார்வையா ளர்கள் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும்அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் சைலன்சமாதர், அபய்குப்தா, ஆனந்த் பிரகாஷ், அஷிஷ் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி பேசியது:

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட அளவில் பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் உரியஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லும் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவைகளை பறிமுதல் செய்து வருகின் றனர். அச்சகங்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் போன்றவை கண்காணிப்பு குழுவி னரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, பத்தி ரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் குறித்தும் குழு அமைக்கப்பட்டு கண்காணிக் கப்படுகிறது.

வருமான வரித்துறையின் மூலம் வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகிறது. வாக் காளர்க ளுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்கு கண் காணிப்பு குழுவினர் முழு நேர கண்காணிப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.

திட்டக்குடி, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிகளுக்கு சைலன் சமாதர் (செல் எண்-9489985235), நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அபய்குப்தா( செல் எண்-9489985236), கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆனந்த் பிரகாஷ் (செல் எண்-9489985237), புவனகிரி, சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதி களுக்கு அஷிஷ் சிங் (செல் எண்-9489985238) ஆகியோர் செலவின பார்வை யாளர்களாக தேர்தல் ஆணையத்தால் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

மாவட்ட தேர்தல் வருமான வரித்துறை அலுவலர் நெடுமாறன், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, முன்னோடி வங்கி மேலாளர் அகிலன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

வருமான வரித்துறையின் மூலம் வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகிறது. வாக் காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்கு கண் காணிப்பு குழுவினர் முழு நேர கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்