பிரதான இரு கட்சிகள் மற்றும் அக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அணுகுமுறை, கடந்த கால செயல்பாடுகளை பொறுத்து ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குகள் கூடலாம்; குறையலாம்.
அதையும் தாண்டி இந்த முறை மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்ட அளவில் வாக்குகளைப் பிரிக்கக் கூடும். பிரதானக் கட்சிகளின் வெற்றித் தோல்வியைத் தீர்மானிப்பதில் இம்முறை இக்கட்சிகளுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்று பரவலான கருத்து நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள இந்த கள நிலவரம் நம் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கும் பொருந்தும்.
இம்முறை தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில் வாக்கு விகிதம் பெருமளவு இக்கட்சிக்கு சரிந்திருந்தாலும், வட மாவட்டங்களில் குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்றும் விஜயகாந்திற்கு என்று குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. அக்கட்சியும் வாக்குகளை குறிப்பிட்ட அளவில் பிரிக்கும் என்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டிய களச் செயல்பாடே நம் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றிகளை தீர்மானிக்கும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago