ஊட்டச்சத்து குறைபாடுகளை களைவதற்காக தேனி மாவட்டத்தில் நாளை முதல் குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
தேனி மாவட்டத்தின் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் ஒன்று முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழு தாக்கம் அதிகம் உள்ளது. திறந்தவெளி கழிப்பிடத்தில் உருவாகும் குடற்புழுக்களினால் இது பரவுகிறது.
இது குடலில் தங்கி ஊட்டச்சத்து மற்றும் ரத்தத்தினை உறிஞ்சி விடுவதால் குழந்தை மற்றும் மாணவப் பருவத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க முகாம் நாளை (திங்கள்) தொடங்கி வரும் 20-ம் தேதி வரை முதல் தவணையாகவும், 22-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை ஒவ்வொரு திங்கள், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளிலும் நடைபெறும். விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 29-ம் தேதி அன்று அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து ஊட்டச்சத்து மையங்களிலும் குடற்புழுநீக்க மாத்திரை வழங்கப்படும்.
இளம்பெண்கள்
மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர 20 முதல் 30 வயதுள்ள பெண்களும் இந்த ‘ஆல்பண்டசோல்’ எனும் குடற்புழுநீக்க மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி கூறுகையில், மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 65 ஊட்டச்சத்து மையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள், 30 நகர துணை சுகாதார நிலையங்கள் மூலம் மொத்தம் 3 லட்சத்து 43 ஆயிரத்து 256 பேருக்கும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 846 பெண்களுக்கும் சுகாதாரத்துறை மூலம் இம்மாத்திரை வழங்க ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
எனவே இந்த முகாமை பொதுமக்கள் உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago