கண்டமனூர், கடமலைக்குண்டு பகுதி களின் சாலையோரங்களில் களைச் செடிகள் அதிகம் முளைத்து கி.மீ. கற் களை மறைத்து விட்டன. இதனால் வாகனங்களில் செல்பவர்களால் தூர விபரங்களை அறிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
க.விலக்கு முதல் வருசநாடு வரை பல்வேறு மலைக் கிராமங்கள் அமைந் துள்ளன. வனப்பகுதிகள் நிறைந்த இப்பகுதியில் சின்னசுருளி, மேகமலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்புகளும், ஊர்களின் தூர விபரங்களும் வழிநெடுகிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதற்காக கி.மீ. கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் பெய்த மழையினால் சாலையோரங்களில் அதிக களைச்செடிகள் முளைத்து விட்டன. இவை உயரமாக வளர்ந்து இந்த கி.மீ. கற்களை மேவி மறைத்து விட்டது. எனவே வெளியூரில் இருந்து வருபவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தூர விபரங்களை தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும் சாலையோரங்களில் இது போன்ற செடிகள் அதிகம் காணப்படுவதால் சாலையின் ஓரப் பகுதிகளின் நிலையை ஓட்டுநர்களால் கணிக்க முடியவில்லை. எதிரெதிரே வாகனங்கள் வரும்போது சாலையை விட்டு மண் பகுதியில் வாகனங்களை இறக்க சிரமப்படும் நிலையும் உள்ளது.
பொதுவாக நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் இதுபோன்ற களைச்செடிகளை அகற்றி, சாலையோரப் பள்ளங்களை மேவுவது வழக்கம்.
ஆனால் இப்பணி தொய் வடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இவற்றை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago