போடி பிச்சாண்டி பள்ளியில் உலக கணித குறியீடு தினம் :

By செய்திப்பிரிவு

கணிதத்தில் தோன்றும் எண்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் விகித முறு எண்ணாக ‘பை’ விளங்குகிறது.

கிரேக்கர்கள் வட்டத்தின் சுற்றளவைக் குறிக்க பெரிமீட்டர் எனும் சொல்லை பயன்படுத்தினர். அதன் முதல் எழுத்துக்குறியீடே இன்று அனைத்துலக மொழிகளிலும் எடுத்தாளப்படுகிறது. 1988-ம் ஆண்டு லேரிஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் மார்ச் 14-ம் தேதியை இந்த குறியீடு தினமாக கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

போடி பிச்சாண்டி நடுநிலைபள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தலைமை யாசிரியர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்தார். கணித ஆசிரியர்கள் கு.சந்திர கலா, ஆ.மரியசிங்கம் ஆகியோர் இந்த குறியீட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினர். 7-ம் வகுப்பு மாணவி சு.ஹரிணி பேசுகையில் பை என்ற இந்த கணிதக் குறியீடானது பரப்பளவு மற்றும் சுற்றளவு காண பயன்படுத்தக்கூடிய எண்ணாகும். இதன் மதிப்பு 3.14 ஆகும். உருளை, கூம்பு வடிவங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வட்டத்தின் பரிதிக்கும், அதன்விட்டத்திற்கும் உள்ள விகிதம் ‘பை’ என்று விளக்கிக் கூறினார். இதில் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்